அனுபவ ஆரோக்கியக்குறிப்புகள்
இக்காலத்தில் அதிகமானவர்களுக்கு அடிக்கடி ஜலதோஷம், மூக்கடைப்பு மூக்கிலிருந்து நீர் வடிகிறது போன்ற பலதொல்லைகளினால் சிரமப்படுகிறார்கள்.
இவர்களுக்காக ஒரு சிறிய வைத்தியக்குறிப்பு
நூறு மில்லி தேங்காய் எண்ணையை ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து
அத்துடன் நான்கு காய்ந்த (வற்றல் மிளகாய்)குண்டுமிளகாய்களையும் சேர்த்துக்
கொதிக்க வைக்கவும். குண்டு மிளகாயின் நிறம் லேசாக கருப்பானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். பின்பு மிளகாய்களை எடுத்து வீசிவிடவும்.
மிளகாய்களைக் கசக்கிப்பிழிய வேண்டாம். எண்ணையை ஒருபாட்டிலில் பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வாரத்துக்கு இரண்டு தடவை இந்த எண்ணையில் கொஞ்சம் எடுத்து தலையில் நன்றாகத் தேய்த்து சுமார் 15 நிமிடங்களின் பின் சீயக்காய் அல்லது நல்ல தரமான ஷாம்பு தேய்த்துக்
குளிக்கவும். எண்ணை தேய்த்துக்குளிக்கிற நாட்களில் வெயிலில் அலைய வேண்டாம்.அன்று பகல் தூக்கம் தவிர்க்கவும்
பி:கு:- தீவிரமான வியாதி உள்ளவர்கள் தங்கள் குடும்ப வைத்தியரைக்கேட்டு இவற்றைச்செய்யவும்
Wednesday, October 7, 2009
Subscribe to:
Posts (Atom)